Published : 13 Feb 2024 06:57 AM
Last Updated : 13 Feb 2024 06:57 AM
புதுடெல்லி: 2023-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் குடியுரிமையை 59,100 இந்தியர்கள் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2023-ம் ஆண்டில் அமெரிக்கநாடானது, 8.7 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கியுள்ளது. இதில் 59,100 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.
இதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவெளிநாட்டவர்களின் பங்கில் இந்தியர்களின் பங்கு 6.7 சதவீதம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு 9.69 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை விட குறைந்த எண்ணிக்கையிலேயே கடந்த 2023-ல் வெளிநாட்டவருக்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. இந்நிலையில் 2022-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற8.7 லட்சம் பேரில் 1.1 லட்சம் பேர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந் துள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் மெக்ஸிகோ நாட்டவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இது 12.7 சதவீதமாகும். இதையடுத்து 2-வது இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. மொத்தம் 59,100 இந்தியர்கள் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இது 6.7 சதவீதமாக உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 44,800 பேர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் டொமினிக்கன் ரிபப்ளிக், கியூபா நாட்டவர்கள் உள்ளனர். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைப் பிரிவின் அறிக்கையில் இத்தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் மொத்தம் 9.69 லட்சம் வெளிநாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு குடியுரிமையை வழங்கியது. அதில் 1.3 லட்சம் பேர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த வர்களாகவும், 65,960 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், 53,413 பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான குடியுரிமை கேட்டுவிண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த நபர்கள் காத்திருக்கும் கால அளவு 3 ஆண்டுகளாக உள்ளது. ஆனாலும், கிரீன் கார்ட்கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக இந்திய மக்கள் அமெரிக்காவில் காத்திருக்கும் நிலையும் அங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT