Published : 13 Feb 2024 06:00 AM
Last Updated : 13 Feb 2024 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வெற்றிலை, கரும்பு பயிரிட, வழக்குகள் பேசி தீர்க்க, வியாபார விஷயம் பேச, வீடு, மனை விற்பதற்கு முன்பணம் பெற, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க நல்ல நாள். ராகு காலத்தில் துர்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து, எலுமிச்சை அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைபட்ட செயல்கள், துரிதமாக நிறைவேறும். அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை நினைத்து உளுந்து அன்னம் நிவேதனம் செய்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேஷம்: வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர்.

ரிஷபம்: கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மிதுனம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வாராக்கடன் வந்து சேரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

கடகம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். மகள் திருமண விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: எந்த விஷயமாக இருந்தாலும், அவசரப்படாமல் குடும்பத்தில் நிதானமாக பேசுங்கள். சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். பழைய வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

துலாம்: நேர்மறை சிந்தனைகள் மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். புதிய துறையில் அடியெடுத்து வைப்பீர். வியாபாரரீதியாக பழைய நண்பரை சந்திப்பீர். பணியாளர்கள் ஆதரவாக இருப்பர்.

விருச்சிகம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள்.

தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்புகிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வீடு வாங்குவதற்கு வங்கி கடனுதவி கிடைக்கும்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். மகனுக்கு அதிக ஊதியத்துடன் பணி கிடைக்கும். நம்பிக்கைக்குரியவர்கள் அறிமுகம் உண்டு.

கும்பம்: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலத்தில் வேலைசுமை குறையும். புதிய வாகனம் வாங்குவீர். வராது என்றிருந்த பணம் வரும்.

மீனம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். அவசியமில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கையைக் கடிக்கும். நண்பர்கள், உறவினர்களின் போக்கால் மனக்கசப்பு வரக்கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x