Published : 03 Feb 2024 06:33 AM
Last Updated : 03 Feb 2024 06:33 AM

‘பாஜக 400 பெறும்’ - கார்கே பேசியதை கேட்டு பிரதமர், எம்.பிக்கள் சிரிப்பு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பியும், கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “ஏற்கெனவே உங்களுக்கு (பாஜக) 330 முதல் 334 மக்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இதனால் தனி மெஜாரிட்டியுடன் அவையில் இருக்கிறீர்கள். இந்த முறை இந்த எண்ணிக்கையானது 400-ஐ தாண்டும்’’ என்றார்.

கார்கேவின் இந்தப் பேச்சால் மக்களவையில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் குலுங்கி குலுங்கி சிரித்தனர். எதிர்க்கட்சியின் தேசியத் தலைவர் ஒருவர், ஆளும்கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பேசியதால் சிரிப்பலை எழுந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x