Published : 03 Feb 2024 05:50 AM
Last Updated : 03 Feb 2024 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: ஓவியம், சிற்பக் கலை கற்க, செங்கல் சூளை பிரிக்க, மூலிகை பறிக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, வேலி அமைக்க நன்று. பெருமாள் கோயில்களில் அபிஷேக ஆராதனை செய்து, தயிர் சாதம் நிவேதனம் செய்வது நல்லது. சனீஸ்வரர் சந்நிதியில் எள் தீபம் ஏற்றினால், தடைகள் விலகும். கோளறு பதிகம், விநாயகர் அகவல், விஷ்ணு சஹஸ்ரநாமம்,  ரங்கநாத அஷ்டகம் படிப்பதால் மன அமைதி கிடைக்கும்.

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிரமுகர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். வாகனப் பழுது நீங்கும்.

மிதுனம்: பழைய பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

கடகம்: திட்டமிட்டபடி வெளியூர் பயணங்கள் அமையும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

சிம்மம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தில் அமைதி திரும்பும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. மனக் குழப்பம் விலகும்.

கன்னி: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

துலாம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

விருச்சிகம்: தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்குவரும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர்.

தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மனைவி, தாயாரின் உடல் நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

மகரம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள், வீடு தேடிவரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர்.

கும்பம்: பணப் பற்றாகுறை விலகும். புதிய தொழில் தொடங்குவீர். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் வரும். உடல்நலம் பாதிக்கும். தியானம் செய்வது நல்லது. அக்கம் பக்கத்தினரின் செயல்பாடு கோபம் தரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x