Published : 08 Jan 2018 05:14 PM
Last Updated : 08 Jan 2018 05:14 PM

தன்பாலின உறவு குற்றமா? - ரத்து செய்யகோரும் மனுவை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

தன்பாலின உறவு என்பது குற்றம் என்பதை வரையறை செய்யும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, அரசியல் சட்டப்படி சரியானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அரசியல் சட்டத்தின் 377வது விதிப்படி, தன்பாலின உறவு  என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை ரத்து செய்து 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தன்பாலின உறவு  ஆதரவாளர்கள்,  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, இன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

‘‘இந்திய அரசியல் சட்டத்தின் 377 வது பிரிவு செல்லதக்கதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ஒருவருக்கு இயற்கையானது இருக்கும் ஒன்று, மற்றொருவருக்கு இயற்கைக்கு மாறானதாக இருக்கும். எனினும் சட்டம் என்பது தனிநபர்களுக்காக வளைந்து கொடுக்காது. ஒப்புதலின் அடிப்பபடையில் நடக்கும் பாலியல் உறவு தனிப்பட்ட உரிமை என்ற மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால், இது தனிநபருக்கான உரிமையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

தனிநபர் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக ஏற்கெனவே அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தன்னுடன் பாலியல் உறவு கொள்ளும் நபரை தீர்மானிக்கும் முடிவு ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற வாதம் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே முந்தைய உத்தரவு குறித்து இந்த நீதிமன்றம் ஆய்வு செய்ய சூழல் உள்ளது ஒரின சேர்க்கை குற்றம் என்றால் மற்றவகை பாலியல் உறவு குறித்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த மனு, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது’’ எனக் கூறினர்.

இதன்படி, சுப்ரீம் கோர்ட் தான் ஏற்கனவே பிறப்பித்த ஒரு உத்தரவை மறு ஆய்வு செய்ய உள்ளது. இந்த விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றவும் உத்தரவிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x