Published : 17 Jul 2023 07:23 AM
Last Updated : 17 Jul 2023 07:23 AM

மனைவியின் உடலுடன் வீட்டுக்கு செல்லும்போது விபத்தில் கணவர் பலி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், எல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ராவ் (31). இவரது மனைவி சரண்யா (29). கடந்த13-ம் தேதி, பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சிமருந்து குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு மல்லிகார்ஜுன ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர், ஆம்புலன்ஸில் சரண்யாவின் உடலை ஏற்றிவிட்டு, பின்னால், பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த லாரி வேகமாக மோதியதில் மல்லிகார்ஜுன ராவ் உயிரிழந்தார். தாயும், தந்தையும் உயிர் இழந்ததால் இவர்களின் இரு பிள்ளைகளும் கதறி அழுதது அனைவரின் மனதையும் உருக்கும் வண்ணம் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x