Published : 11 Mar 2021 02:16 PM
Last Updated : 11 Mar 2021 02:16 PM

64 - கீழ்பெண்ணாத்தூர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செல்வக்குமார் (பாமக) அதிமுக
கு.பிச்சாண்டி திமுக
பி.கார்த்திகேயன் அமமுக
சுகானந்தம் மக்கள் நீதி மய்யம்
இரா.ரமேஷ்பாபு நாம் தமிழர் கட்சி

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயமானது. கலசப்பாக்கம், திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் இருந்த குறிப்பிட்ட பகுதிகள் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. வன்னியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஆதிதிராவிடர்கள் வசித்து வருகின்றனர்.

ஆவூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதர சமூகத்தினர் பரவலாக உள்ளனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருவண்ணாமலை வட்டம் (பகுதி) கீழாத்தூர், மேப்பத்துறை, சிறுக்கிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, வடபுழுதியூர், அகரம்சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், சாலையனூர், மல்லப்பன்நாயக்கன்பாளையம், கார்க்கோணம், கோவூர், கமலப்புத்தூர், ஆர்ப்பாக்க, பூதமங்கலம், வைரபெரியன்குப்பம், வேடந்தவாடி, மங்கலம், பாலானந்தல், வெளுங்கானந்தல, சொரகொளத்தூர், வடகருங்காலிப்பாடி, மருத்ஹ§வாம்பாடி, சி.அண்டப்பட்டு, தேவனம்பட்டு, பெரியகிளாம்பாடி, உதிரம்பூண்டி, காட்டுப்புத்தூர், கொளக்கரவாடி கருந்துவம்பாடி, மல்லவாடி, சொரந்தை, கூத்தலவாடி, வடகரிம்பலூர், மேதலம்பாடி, தூக்காம்பாடி, இராந்தம், கனலாப்பாடி, கோதண்டவாடி எரும்பூண்டி, செவரப்பூண்டி, கீகளூர், கட்தாழம்பட்டு, மேக்களூர், வழுதலங்குளம், கனபாபுரம் கழிக்குளம், ஊதம்பூண்டி, நம்மியந்தல், களஸ்தம்பாடி, துரிஞ்சாபுரம், ஊசாம்பாடி, சீலப்பந்தல், பிச்சாநந்தல், இனாம்காரியந்தால், முனியந்தல், வெளுக்கனந்தல், சடையனோடை சானானந்தல், தெள்ளானந்தல், வள்ளிவாகை, வட்ராப்புத்தூர், ஜங்குணம், கர்ணம்பூண்டி, நாரியமங்கலம், கல்பூண்டி, சிறுநாத்தூர், சோமாசிப்பாடி, சோ.நமியந்தல், கன்னியந்தல், குமரக்குடி, ஆராஞ்சி, களித்தேரி, சிறுகொத்தான், கடம்பை, குன்னங்குப்பம், ராயம்பேட்டை, ஆண்டாளூர், மானாவாரம், கரிக்கிலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடந்த்தம், கொளத்தூர், காட்டுமலையனூர், காட்டுவேளானந்தல், சு.பொலக்கொணம், கலிங்கலேரி, சொர்ப்பனந்தல், கீரனூர், அரும்பாக்கம், வேளானந்தல், நெய்குப்பம், கோணலூர், நாடழகானந்தல், சானிப்பூண்டி, ஏர்ப்பாக்கம், ஜமீன்கூடலூர், நெய்வானத்தம், ஆவூர், வயலூர், ராஜந்தாங்கல், இலுப்பந்தாங்கல், நா.கெங்கப்பட்டு, செய்யலேரி, செல்லம்குப்பம், தண்டரை, இசுக்கழிக்காட்டேரி, கீழ்கரிப்பூர், கல்லணை, வெண்ணியந்தல், ஓலைப்பாடி, அணுக்குமலை, பொன்னமேடு, கல்லாயி, சொரத்தூர், வைப்பூர், அகரம், பன்னியூர், அண்டம்பள்ளம், க.நல்லூர், திருவரங்கம்வாளவெட்டி, திருக்காளூர்வாளவெட்டி, வெறையூர், நாயர்பட்டு, திருவாணைமுகம், ஆங்குணம், அன்னந்தல், சு.வாளவெட்டி, கல்லேரி, அருதிராப்பட்டு, பெருமணம், தேவனூர், பனையூர், பொரிக்கல், காடகமான், மதுராம்பட்டு, விருதுவிளங்கினான், கிளியாப்பட்டு, குன்னமுறிஞ்சி, வதுட ஆண்டாப்பட்டு, வெங்காயவேலூர் மற்றும் நாரையூர் கிராமங்கள்.கீழ்பெண்ணாத்தூர் (பேரூராட்சி) மற்றும் வேட்டவலம் (பேரூராட்சி)

தொகுதி மக்கள் கோரிக்கைகள்

விவசாயிகள் நிறைந்த பகுதி. கரும்பு, நெல், பூக்கள் மற்றும் தோட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்க திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அமைக்கும் வேண்டும் என்ற கோரிக்கை அரைநூற்றாண்டு கனவு திட்டமாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. இந்த திட்டம் முழுமைபெற்றால், திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் இல்லாமல் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளும் பெரும் பயனடைவார்கள். அதேபோல், கவுத்தி மலையில் இருந்து உற்பத்தியாகும் துரிஞ்சலாறு தூர் வாரப்பட வேண்டும்.

தொழில்வளர்ச்சி இல்லாத பகுதி என்பதால் சிறு குறு தொழிற்சாலையை அமைத்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், அரசு கலைக்கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்க வேண்டும். திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே உள்ள வேட்டவலம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், புறவழிச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும். ஆவூர் பகுதியில் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் ‘பாய்’ உற்பத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும்.

கீழ்பென்னாத்தூர் சட்டபேரவை தொகுதியில் நடைபெற்றுள்ள 2 தேர்தல்களில் (2011, 2016) அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த செல்வமணியை வீழ்த்தி திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,23,722

பெண்

1,28,317

மூன்றாம் பாலினத்தவர்

8

மொத்த வாக்காளர்கள்

2,52,047

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.செல்வமணி

அதிமுக

2

கே.பிச்சாண்டி

தி.மு.க

3

கே.ஜோதி

இந்திய கம்யூனிஸ்ட்

4

கோ.எதிரொலிமணியன்

பாமக

5

எம்.சுப்பராயன்

பாஜக

6

ஆர்.ரமேஷ்பாபு

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A.K. அரங்கநாதன்

அ.தி.மு.க

83663

2

K. பிச்சாண்டி

தி.மு.க

79582

3

D. ஸ்ரீதரன்

சுயேச்சை

2301

4

D. பிச்சாண்டி

பி.ஜே.பி

1811

5

R. சேது

சுயேச்சை

1724

6

A. ஐசக் நியூட்டன்

பி.எஸ்.பி

1203

7

M. முருகன்

சுயேச்சை

1057

8

P. வெள்ளகண்ணு

சுயேச்சை

628

9

M. சம்பத்ராஜ்

சுயேச்சை

410

10

A. ஜனார்த்தனம்

ஐ.ஜே.கே

408

11

A.R. சுகுணா பாண்டியன்

சுயேச்சை

243

12

G. செல்வராஜ்

எல்.எஸ்.பி

193

13

K. கார்த்திக்

சுயேச்சை

189

14

S. சசிகுமார்

சுயேச்சை

164

173576

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x