Published : 16 Mar 2019 09:55 AM
Last Updated : 16 Mar 2019 09:55 AM

‘60 +’ தலைவர்களின் கையில் தமிழக அரசியல்

ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, 50-களில் பிறந்தவர்களின் கைகளுக்கு வந்திருக்கிறது தமிழக அரசியல்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் 1951-ல் பிறந்தவர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற தற்போதைய முதல்வர் பழனிசாமி 1954-ல் பிறந்தவர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் 1953-ல் பிறந்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் 1952-ல் பிறந்தவர். சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்கள் இலக்கு என்று கூறியுள்ள ரஜினிகாந்த் பிறந்தது 1950-ல்.

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, தற்போது அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியுள்ள கமல்ஹாசன் 1954-ல் பிறந்தவர். ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் பலரும் 1950-களில் பிறந்தவர்கள். 60 வயதுகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x