Published : 08 Mar 2019 03:23 PM
Last Updated : 08 Mar 2019 03:23 PM

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேர்வு தொடங்கியது: புதுமுக வேட்பாளரை களம் இறக்க முடிவு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து முதற்கட்ட ஆலோசனையாக கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் புதுமுக வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.

திமுக கூட்டணியில் திண்டுக்கல் மக் களவைத் தொகுதியில் போட்டியிட கூட்ட ணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

இதனால், திமுக போட்டியிடுவது உறுதி யாகிவிட்டது. ஏற்கெனவே திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாணார்பட்டி விஜயன், செயற்குழு உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் 11 பேர் இதுவரை போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடம் மனு அளித்துள்ளனர்.

விருப்பமனு அளித்தோரிடம் மார்ச் 10 முதல் அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதற்குள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை அழைத்து வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என முன்னோட்டமாக முதற்கட்ட ஆலோசனை மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில திமுக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்களிடம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது. யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்பது குறித்து ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தனித்தனியாக கருத் துகள் கேட்கப் பட்டன. நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்ட பின், போட்டியிட விருப் பம் தெரிவித்து விண்ணப்பித் தோரி டமும் கருத்துகள் கேட் கப்பட்டன. நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் குறித்து சென்னையில் நடைபெறும் வேட்பாளர் நேர்காணலின்போது கட்சித் தலைமையிடம் திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்கும்.

மொத்தத்தில் திமுக சார்பில் களம் இறக்கப்படுவது புதுமுக வேட்பாளராகத்தான் இருக்கும் என்கின்றனர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x