Published : 22 Mar 2019 10:46 AM
Last Updated : 22 Mar 2019 10:46 AM

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) அமமுக வெளியிட்டது. அதன்விவரம்:

வடசென்னை:

பி.சந்தானகிருஷ்ணன், வடசென்னை தெற்குமாவட்ட அமமுக செயலாளர்

அரக்கோணம்:

என்.ஜி.பார்த்திபன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்

வேலூர்:

கே.பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர், அமமுக அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணகிரி:

ச.கணேசகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார்.

தருமபுரி:

பி.பழனியப்பன், முன்னாள் அமைச்சர், கழக தலைமை நிலைய செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திருவண்ணாமலை:

ஞானசேகர், வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

ஆரணி:

ஜி.செந்தமிழன், முன்னாள் அமைச்சர்

கள்ளக்குறிச்சி:

கோமுகி மணியன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல்:

பி.ஜோதிமுருகன்

கடலூர்:

கே.ஆர்.கார்த்திக், கழக பொறியாளர் அணி செயலாளராக பணியாற்றி வருகிறார்

தேனி:

தங்க தமிழ்ச்செல்வன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

விருதுநகர்:

பரமசிவ ஐயப்பன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்

தூத்துக்குடி:

ம.புவனேஸ்வரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

கன்னியாகுமரி:

லெட்சுமணன், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x