Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM

172 - பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று பாபநாசம் தொகுதி.

பாபநாசம் ஒன்றியத்தின் 34 ஊராட்சிகள், தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்ட வலங்கைமான் தனித் தொகியில் இருந்த அம்மாப்பேட்டை ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் நாகக்குடி, பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி ஆகிய 3 ஊராட்சிகள், பாபநாசம், சுவாமிமலை, மெலட்டூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை உள்ளடக்கியத் தொகுதி.

காவிரி, கொள்ளிடம், அரசலாற்றுப் படுகையில் உள்ள இத்தொகுதி விவசாயத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளது. நெல், கரும்பு, வெற்றிலை, வாழை முக்கிய விளை பொருட்கள். இங்குள்ள சுவாமிமலையில் சோழர் காலத்திலிருந்து பாரம்பரியமாக செப்புத் திருமேனிகள் உருவாக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.

தலித், வன்னியர், மூப்பனார், கள்ளர், முஸ்லிம், உடையார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி, மூன்றரை கோடி மதிப்பில் ராமானூஜபுரத்தில் காவிரியின் குறிக்கே தடுப்பணை, களஞ்சேரி வெண்ணாற்றில் ரூ. 3 கோடியில் கரை தடுப்புச் சுவர், கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கு ஆகியன புதுவரவுகள்.

பாபநாசத்தில் உள்ள 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். சுந்தரபெருமாள்கோயில் - அண்டக்குடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தீவு கிராமங்களான மேலராமநல்லூர், கீழராமநல்லூர் - கருப்பூர் இடையே தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். அம்மாப்பேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், பாபநாசத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும், வெள்ளத் தடுப்புக்கா ஆறுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பாபநாசத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும், ரூ.1,412 கோடியில் தஞ்சாவூர் - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்க வேண்டும், பாபநாசம் ரயில் நிலையத்தில் அடிபடை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் ராமேஸ்வரம், ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நின்று செல்ல வேண்டும் என்பன தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்.

கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 8 முறை காங்கிரஸ், 2 முறை அதிமுக, 2 முறை தமாக, 1 முறை திமுக வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006-ல் முதல் முறையாக வெற்றிப் பயணத்தை தொடங்கிய அதிமுக, 2011 தேர்தலிலும் வெற்றி பெற்றது. இரண்டு முறையும் அதிமுகவின் இரா. துரைக்கண்ணு வெற்றிபெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

இரா. துரைக்கண்ணு

அதிமுக

2

டி.ஆர். லோகநாதன்

காங்கிரஸ்

3

து. ஜெயக்குமார்

தமாகா

4

கோ. ஆலயமணி

பாமக

5

த. குணசேகரன்

பாஜக

6

மு.இ. ஹூமாயூன் கபீர்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பாபநாசம் வட்டம்

கும்பகோணம் வட்டம் (பகுதி)

நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள்,

சுவாமிமலை (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்

ஆண்

1,19,020

பெண்

1,21,142

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,40,172தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

துரைக்கண்ணு

அதிமுக

2006

துரைக்கண்ணு

அதிமுக

55.04

2001

M.ராம்குமார்

தமாகா

53.78

1996

N.கருப்பண்ணஉடையார்

தமாகா

44.9

1991

S.ராஜராமன்

காங்கிரஸ்

64.25

1989

ஜி.கருப்பையாமூப்பனார்

காங்கிரஸ்

29.5

1984

S.ராஜராமன்

காங்கிரஸ்

67.4

1980

S.ராஜராமன்

காங்கிரஸ்

59.79

1977

R.V.சவுந்தர்ராஜன்

காங்கிரஸ்

34.41

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. துரைக்கண்ணு

அ.தி.மு.க

60027

2

M. ராம்குமார்

காங்கிரஸ்

53026

3

N. மருதையன்

தே.மு.தி.க

4443

4

R. வாசுதேவன்

பாஜக

1594

5

R. சங்கீதா

பி.எஸ்.பி

1174

6

A.M. மோகன்

எ.ஐ.எப்.பி

1145

7

P. அண்ணாதுரை

சுயேச்சை

897

8

A. துரை புரனுதீன்

எஸ்.பி

874

123180

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. துரைக்கண்ணு

அ.தி.மு.க

85635

2

M. ராம்குமார்

காங்கிரஸ்

67628

3

T. மகேந்திரன்

பி.ஜே.பி

1596

4

P.A. முகமத் கனி

சுயேச்சை

1231

5

K. சம்பாவைத்தியநாதன்

எ.பி.எச்.எம்

1174

6

R. திருமேனி

பி.எஸ்.பி

1082

7

V. குழந்தைவேலு

சுயேச்சை

585

8

A.M. ராஜா

சுயேச்சை

370

9

A.M. ராஜாமுகமது

சுயேச்சை

327

10

P. அறிவழகன்

சுயேச்சை

301

11

A. தமிழ்செல்வி

சுயேச்சை

233

160162

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x