Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM

171 - கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று கும்பகோணம்.

கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 2 ஊராட்சிகள், சோழபுரம், தாரசுரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.

கோயில்களின் நகரமான இங்கு, புகழ்பெற்ற மகாமகம் குளம், உலகப் பாரம்பரிய சின்னமான சோழர் கால தாராசுரம் கோயில், தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் அரசு ஆண்கள் கல்லூரி, சென்னைக்கு அடுத்து அமைந்துள்ள கொட்டையூர் அரசு நுண்கலை கல்லூரி, அரசுப் பெண்கள் கல்லூரி, மாவட்டத் தலைமை அரசுப் பொது மருத்துவமனை மற்றும் தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பள்ளிகள் நிறைய உள்ளன.

அனைத்து சமூகத்தினரும் பரவலாக வசிக்கும் தொகுதி. விவசாயம், கைத்தறி நெசவு, சிலைகள், பாத்திரம் தயாரிப்பு போன்றவை முக்கியத் தொழில்கள்.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். புதைச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நகரினுள் ஓடும் 4 முக்கிய வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வார வேண்டும். மீன்மார்க்கெட், உச்சிப்பிள்ளையார் கோயில், மொட்டைக்கோபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும். காவிரி, அரசலாறு உள்ளிட்ட ஆறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தாராசுரம் - பட்டீஸ்வரம் சாலையிலும், அண்ணலக்ரகாரம் - கும்பகோணம் சாலையிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்டு சீரமைக்க வேண்டும். சுற்றுச் சாலையின் 2-ம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள்.

கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 7 முறை காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுகவின் கோ.சி. மணியும், 2011 தேர்தலில் திமுகவின் சாக்கோட்டை க. அன்பழகனும் வெற்றி பெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ரத்னா சேகர்

அதிமுக

2

சாக்கோட்டை க. அன்பழகன்

திமுக

3

த. பரமசிவம்

தேமுதிக

4

கி. வெங்கட்ராமன்

பாமக

5

பழ. அண்ணாமலை

பாஜக

6

மா. மணிசெந்தில்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கும்பகோணம் வட்டம் (பகுதி)

அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.

கும்பகோணம், சோழபுரம், உள்ளூர், பெருமாண்டி, தாராசுரம்மற்றும் திருநாகேஸ்வரம்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,21,805

பெண்

1,24,460

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,46,265

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

க.அன்பழகன்

தி.மு.க

2006

கோ.சி.மணி

தி.மு.க

55.04

2001

கோ.சி.மணி

திமுக

53.78

1996

கோ.சி.மணி

திமுக

44.9

1991

இராம.இராமநாதன்

அதிமுக

64.25

1989

கோ.சி.மணி

திமுக

29.5

1984

K.கிருஷ்ணமூர்த்தி

காங்கிரஸ்

67.4

1980

E.S.M. பக்கீர்முஹம்மது

காங்கிரஸ்

59.79

1977

S.R.இராதா

அதிமுக

34.41

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கோசி. மணி

தி.மு.க

63305

2

E. ராமநாதன்

அ.தி.மு.க

51164

3

G. தேவதாஸ்

தே.மு.தி.க

5195

4

R. கோதண்டராமன்

பி.ஜே.பி

1629

5

R. வெங்கட்ரமனி

சுயேச்சை

824

6

T. ராமகிருஷ்ணன்

பி.எஸ்.பி

530

7

A. சங்கரநாராயணன்

எஸ் பி

391

125038

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

G. அன்பழகன்

தி.மு.க

78642

2

E. ராமநாதன்

அ.தி.மு.க

77370

3

P.L. அண்ணாமலை

பி.ஜே.பி

1606

4

M.B.S. தட்சணாமூர்த்தி

ஐ.ஜே.கே

1087

5

G. ராஜ்குமார்

பி.எஸ்.பி

727

6

S. விஜயாலக்‌ஷ்மி

சுயேச்சை

649

7

M. பனிமய மேரி ராஜ்

சுயேச்சை

555

8

R. மோகன்

சுயேச்சை

478

9

P. சுப்பிரமணியன்

சுயேச்சை

294

123180

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x