Published : 05 Apr 2016 16:08 pm

Updated : 24 May 2016 11:41 am

 

Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 24 May 2016 11:41 AM

92 - ராசிபுரம் (தனி)

92

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் ராசிபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியும் ஒன்றாகும். ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், ஆர்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர் என, 5 பேரூராட்சி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சேகோ உற்பத்தி, விசைத்தறி மற்றும் விவசாயம் பிரதான தொழிலாகும். ராசிபுரம் பட்டு, நெய் போன்றவை தொகுதியின் அடையாளமாகவும் உள்ளது.

சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளதால், கல்வி நகரகமாகும் உருவெடுத்து உள்ளது. தனியார் பள்ளி, கல்லூரிகளை பிரதானப்படுத்தி நகரம் விரிவாக்கம் பெற்று வருகிறது. இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என, அனைத்து மதத்தினரும் கணிசமான அளவில் தொகுதியில் உள்ளனர். சட்டப்பேரவை தொகுதியில் ராசிபுரம் நகர போக்குவரத்து நெரிசல் பிரதான பிரச்சினையாக உள்ளது.

அதற்கு தீர்வு காணும் வகையில் ரிங் ரோடு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நிலவுவதால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல் கடந்த 1962, 1967, 1971, 1989 மற்றும் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், 1977, 1980, 1984, 1991, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் வி. பி. துரைசாமி, அதிமுக சார்பில் ப. தனபால் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ப. தனபால் வெற்றி பெற்று சபாநாயகராக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டாக்டர் வி. சரோஜா

அதிமுக

2

வி. பி. துரைசாமி

திமுக

3

ஜி. ஆர்ஜூன்

விசிக

4

ஜெ. புஷ்பாகாந்தி

பாமக

5

சி. குப்புசாமி

பாஜக

6

எஸ். அருண்குமார்

நாம் தமிழர்

7

ப. பாரதி

கொமதேக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,09,264

பெண்

1,12,483

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,21,747

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

டி. எம். காளியண்ணன்

காங்கிரஸ்

18553

1957

எ. இராஜா கவுண்டர்

காங்கிரஸ்

20983

1962

என். பி. செங்கோட்டுவேல்

திமுக

26846

1967

பி. பெரியசாமி

திமுக

38402

1971

ஆர். நைனாமலை

திமுக

41079

1977

பி. துரைசாமி

அதிமுக

33762

1980

கே. பி. இராமலிங்கம்

அதிமுக

49779

1984

கே. பி. இராமலிங்கம்

அதிமுக

51565

1989

எ. சுப்பு

திமுக

39534

1991

கே. பழனியம்மாள்

அதிமுக

75855

1996

பி. ஆர். சுந்தரம்

அதிமுக

42294

2001

பி. ஆர். சுந்தரம்

அதிமுக

67332

2006 **

கே. பி. இராமசாமி

திமுக

62629

2011

ப. தனபால்

அதிமுக

90186

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

கே. இராமசாமி

சுயேச்சை

10189

1957

கே. வி. கே. இராமசாமி

சுயேச்சை

17545

1962

முத்துசாமி கவுண்டர்

காங்கிரஸ்

26776

1967

கே எம். கவுண்டர்

காங்கிரஸ்

30873

1971

பி. கணபதி

காங்கிரஸ் (ஸ்தாபன)

31161

1977

கே. சி. பெரியசாமி

திமுக

19374

1980

பி. டி. முத்து

திமுக

34175

1984

பி. காளியப்பன்

திமுக

41087

1989

வி. தமிழரசு

அதிமுக (ஜெ)

39074

1991

பி. எ. ஆர். இளங்கோவன்

திமுக

25625

1996

ஆர். ஆர். தமயந்தி

திமுக

41840

2001

கே. பி. இராமலிங்கம்

திமுக

44303

2006 **

பி. ஆர். சுந்தரம்

அதிமுக

57660

2011

வி.பி. துரைசாமி

திமுக

65469

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.P. ராமசாமி

தி.மு.க

62629

2

P.R. சுந்தரம்

அ.தி.மு.க

57660

3

R. ராஜாகோவுண்டர்

தே.மு.தி.க

11992

4

K. ராமசாமி

சுயேச்சை

1490

5

ராஜாமணி வேலி

பி.ஜே.பி

1427

6

P. வெங்கடாசலம்

சுயேச்சை

889

7

P. துரைசாமி

சுயேச்சை

530

8

R. சின்னுசாமி

சுயேச்சை

478

9

L. சண்முகம்

சுயேச்சை

213

10

R. கணபதி

சுயேச்சை

155

11

R. கோவிந்தசாமி

சுயேச்சை

147

12

S. கந்தசாமி

சுயேச்சை

140

137750

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. தனபால்

அ.தி.மு.க

90186

2

V.P. துரைசாமி

தி.மு.க

65469

3

L. முருகன்

பி.ஜே.பி

1730

4

S. பெரியசாமி

ஐ.ஜே.கே

1704

5

V. ரங்கராசு

சுயேச்சை

1700

6

P.K. செல்வம்

சுயேச்சை

612

7

T. விநாயகமூர்த்தி

பி.எஸ்.பி

427

8

C. கண்ணன்

சுயேச்சை

389

162217

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்ராசிபுரம் தனி தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author