Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

54 - வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை 5 தொகுதிகள் இருந்தது. கடந்த தேர்தலின் போது, மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் உருவான தொகுதி வேப்பனப்பள்ளி தொகுதியாகும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையும், அதிக வனப்பகுதியையும் கொண்டு உள்ளது.

நகராட்சி, பேரூராட்சி என நகர்புறங்களே இல்லாத தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளும், சூளகிரி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும், கெலமங்கலம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகள் என முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகளை கொண்ட தொகுதியாகும். உள்ளடங்கிய தொகுதியாகும். மேலும், தொகுதியின் மையப்பகுதியில் தான் இந்தியாவிலேயே மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண். 7 (கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை) செல்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என 4 மொழி பேசும் மக்கள் சரிசமமாக உள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் தேன்கனிக்கோட்டை என 3 வட்டங்கள் பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இந்த தொகுதியில் கவுடா, ரெட்டி, சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியாக வேப்பனப்பள்ளி உள்ளது.

ஜீனூர் என்னுமிடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம், ரூ. 14 கோடி மதிப்பில் சிங்கிரிப்பள்ளி அணை திட்டம், கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்னுமிடத்தில் 90 ஏக்கரில் சிப்காட் வளாகம், போலுப்பள்ளியில் “கிருஷ்மா” என பெயரிடப்பட்ட மாம்பழ கூழ் ஏற்றுமதி மையம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதே போல், தொகுதியின் மையப்பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அளியாளம், சுபகிரி ஆகய 3 இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்டி, இந்த பகுதியில் காய்ந்து போயுள்ள ஏரிகளுக்கு கால்வாய் வெட்டி, சுமார் 200 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வனப்பகுதி நிறைந்த தொகுதி என்பதால் யானைகள் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. ஊடேதுர்க்கம், சானமாவு, சூளகிரி, மகராஜகடை ஆகிய பகுதிகளையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டு, வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை விளையும் விளைபொருட்களை நாசம் செய்து வருகிறது. அத்துடன் மனித உயிரிழப்புகளும் இதனால் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனில் சானமாவு வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என கோரிக்கையும் நீண்ட காலமாகவே உள்ளது. யானைகளால் தொடர்ந்து இந்த தொகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த தொகுதியில் உள்ள ராயக்கோட்டை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு ரயில் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. கிராம ஊராட்சியாக உள்ள இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. அதே போல் உத்தனப்பள்ளி, அத்திமுகம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. எனவே இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களும், மிகவும் மோசமான சாலைகள் கொண்ட தொகுதியாக தான் வேப்பனஹள்ளி தொகுதி திகழ்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் எம்எல்ஏ 71471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் முருகேசன் 63867 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

வேப்பனஹள்ளி தாலுக்கா (பகுதி)

மாட்டுஓணி, கொல்லப்பள்ளி, செலவந்தொட்டி, சாப்பரப்பள்ளி, கெத்தலந்தொட்டி,சின்னாரந்தொட்டி, மலகலக்கி, தொட்டேகவுணிப்பள்ளி, குடிசாதனப்பள்ளி, கூள்ளு, நெரிகம், கரியசந்திரம், பன்னப்பள்ளி, மீனாந்தொட்டி, சொக்காபுரம், கோட்டசாதனப்பள்ளி, அமுதோகொண்டபள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், புக்கசாகரம், தோரிப்பள்ளி, பட்டகுருபரப்பள்ளி, கொடிக திம்மனப்பள்ளி கலிங்காவரம், செம்பரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சொரகாயலப்பள்ளி, சகாதேவபுரம், தொட்டூர், மட்டம்பள்ளி, பஸ்தலப்பள்ளி, புக்கனப்பள்ளி, காமன் தொட்டி, சுப்பகிரி, சானமாவு, ஹலேகோட்டா, சாமனப்பள்ளி, எனுசோனை, சென்னப்பள்ளி, தேவரகுட்டப்பள்ளி, குடிசாலப்பள்ளி, ஏர்ராண்டப்பள்ளி, மலசொந்திரம், பாலகொண்டராயணதுர்கம், சின்னகுடிபாலா, இம்மிடிநாயக்கனப்பள்ளி, உல்லட்டி, அகரம் அக்ரஹாரம், துப்புகானப்பள்ளி, தியனதுர்கம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி, உலகம், ஒசஹள்ளி, செக்கலைகோட்டை, மேலுமலை, புக்கனப்பள்ளி மற்றும் மெடிதேபள்ளி கிராமங்கள்.

தேன்கனிக்கோட்டை தாலுக்கா (பகுதி)

நாகமங்கலம், ஊடேதுர்கம், திமிஜேபள்ளி, முத்தனஹள்ளி, டி.கொல்லஹள்ளி, கருக்கனஹள்ளி, செங்கோடசின்னஹள்ளி, சூளகுண்டா, இராயகோட்டை, பில்லாரி அக்ரஹாரம், நெல்லூர், எச்சினஹள்ளி மற்றும் ஒடையாணஹள்ளி கிராமங்கள், கிருஷ்ணகிரி தாலுக்கா (பகுதி) பத்திமடுகு, இடிபள்ளி, ஒட்டபள்ளி, இடிபள்ளி, சிகரலப்பள்ளி, காசிர்கானப்பள்ளி, கொல்லபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்பிரை, கொங்கனப்பள்ளி, சிகரமாக்கனப்பள்ளி, தொட்டகனமா, கங்கமடுகு, மனவாரணப்பள்ளி, சீரனப்பள்ளி, நேரலகிரி, பாலனப்பள்ளி, கிருஷ்ணநாயக்கன்புதூர், அலேகிருஷ்ணாபுரம், தீர்த்தம், எட்டிப்பள்ளி, எட்டிப்பள்ளி தலாவு, பன்னப்பள்ளி, பூதிமுட்லு, உண்டிகாநத்தம், அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம், தங்கடிகுப்பம், ராகிமானப்பள்ளி, கரியசாஹரம்தலாவ், அலேகுந்தானி, நல்லூர், சிம்மல்வாடி, தேவரகுந்தானி, இடையனபள்ளி, கதிரிபள்ளி, கடவாரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, தளிபள்ளி, தாசிகவுனிப்பள்ளி, நாடுவானப்பள்ளி, புரம், அப்பிநாய்க்கன்கோட்டை, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, விருப்பசந்திரன், தாசிரிப்பள்ளி, மாதேப்பள்ளி, தடதாரை, பொம்மரசனப்பள்ளி, சூலமலை, பந்திகுற்க்கி, சின்னகொத்தூர், சென்னசந்திரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டபள்ளி, குண்டப்பள்ளி, லக்கபெத்தலப்பள்ளி, மாரசந்திரம், பொன்னகவுண்டபள்ளி, கோடிப்பள்ளி, நேரலப்பள்ளி, கோதிகுட்டலப்பள்ளி, பெதனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பில்லனகுப்பம், கொல்லபள்ளி மற்றும் புளியஞ்சேரி கிராமங்கள்

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏவிஎம். மது(எ) ஹோம்நாத்

அதிமுக

2

பி.முருகன்

திமுக

3

நாகராஜன்

தேமுதிக

4

எஸ்.எம். தமிழ்செல்வி

பாமக

5

வி.எஸ்.பிரேம்நாதன்

பாஜக

6

இளம்தமிழன்

நாம் தமிழர்29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,16,547

பெண்

1,11,175

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,27,732

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

54. வேப்பனஹள்ளி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T. செங்குட்டவன்

தி.மு.க

71471

2

S.M. கந்தன்

தே.மு.தி.க

63867

3

V. ரங்கநாதன்

யு.எம்.கே

8943

4

V.S. பிரேமநாதன்

பி.ஜே.பி

5035

5

N.V. கல்யாணி

சுயேச்சை

4766

6

C.L. சூரியா பிரகாஷ்

பி.எஸ்.பி

2732

7

S.B. அப்பாஸ்

சுயேச்சை

1690

மொத்தம்

158504

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x