Published : 05 Apr 2016 03:47 PM
Last Updated : 05 Apr 2016 03:47 PM

158 - சிதம்பரம்

கடலூர் மாவட்டத்தின் சுற்றுலா நகர தொகுதி சிதம்பரம் ஆகும். இங்கு உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தில்லைகாளியம்மன் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் ஆகியவை உள்ளன. இந்த பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். பெரிய தொழிற்சாலைகள் இங்கு கிடையாது. விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதி. வன்னியர், ஆதிதிராவிடர், கார்காத்தார்,செட்டியார், நாயுடு, முஸ்லிம், மீனவர்கள்,கிருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இங்கு கவரிங் தொழில் கொடி கட்டி பறக்கிறது.

இந்த தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். 2 லட்சத்து 28 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 853பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 7 பேரும் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நின்ற பாலகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் கொண்டு வரவில்லை என்ற குறை மக்களிடம் உள்ளது. அரசு வெள்ள தடுப்பு நடவடிக்கையை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கிராம மக்களிடம் உள்ளது. அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலை தூர்வாரிட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கொள்ளிடம் ஊற்று நீரை தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை திருப்பி கான்சாகிப் வாய்க்காலில் விட்டால் சிதம்பரம் கீழ் பகுதி மக்களுக்க விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று இருந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தாததால் கிள்ளை, பிச்சாவரம் பகுதி மக்கள் அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.ஏ.பாண்டியன்

அதிமுக

2

கே.ஆர். செந்தில்குமார்

திமுக

3

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட்

4

ஆர்.அருள்

பாமக

5

பி. சதீஷ்குமார்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சிதம்பரம் வட்டம் (பகுதி)

வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம், பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, பெரியபட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், கொத்தட்டை, அரியகோஷ்டி, சின்னகுமட்டி, வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, கீழ்மணக்குடி, தச்சக்காடு, மஞ்சக்குழி, பெரியகுமட்டி, நஞ்சைமகத்துவாழ்க்கை, பு.மடுவங்கரை, முட்லூர், பு, முட்லூர், பு.ஆதிவராகநல்லூர், பு.அருண்மொழித்தேவன், ஆயிபுரம், குறியாமங்கலம், மேலமூங்கிலடி, கீழமுங்கிலடி, புஞ்சைமாங்காட்டுவாழ்க்கை, தில்லைவிடங்கன், பின்னத்தூர், கீழ்னுவம்பட்டு, மேலனுபவம்பட்டு, பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை, லால்புரம், தில்லைநாயகபுரம், கோவிலாம்பூண்டி, கொடிப்பள்ளம், ராதாவினாகம், உத்தமசோழமங்கலம், பிச்சாவரம், தாண்டவராயன்சோழகன்பேட்டை, கனக்கரப்பட்டு, நக்கரவந்தன்குடி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி, பள்ளிப்படை, பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர், சி, கொத்தங்குடி, குமாரமங்கலம், வசப்புத்தூர், கவரப்பட்டு, கீழ்ப்பெரம்பை, திருக்கழிப்பாலை (கீழ்), சித்தலப்பாடி, உசுப்பூர், சிதம்பரம். நாஞ்சலூர், செட்டிமுட்டு, கடவாச்சேரி, சிவபுரி, பேட்டை, வரகூர், திருக்கழிப்பாலை (மேல்), அம்பிகாபுரம், ஜெயங்கொண்டபட்டிணம் பேராம்பட்டு, சாலியந்தோப்பு, கூத்தன்கோயில், இளநாங்கூர், சி.வக்கரமாரி, சிவாயம், பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, காட்டுக்கூடலூர், வையூர், அகரநல்லூர், வல்லம்படுகை, கீழ்குண்டலப்பாடி, மற்றும் எருக்கன்காட்டுப்படுகை கிராமங்கள்.

பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,13,031

பெண்

1,16,064

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,29,105

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா

இந்திய தேசியகாங்கிரஸ்

1957

வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா

இந்திய தேசியகாங்கிரஸ்

1962

எஸ்.சிவசுப்பிரமணியன்

இந்திய தேசியகாங்கிரஸ்

1967

ஆர்.கனகசபை பிள்ளை

இந்திய தேசியகாங்கிரஸ்

1971

பி.சொக்கலிங்கம்

திமுக

1977

துரை.கலியமூர்த்தி

திமுக

1980

கே.ஆர்.கனபதி

அதிமுக

1984

கே.ஆர்.கனபதி

அதிமுக

1989

துரை.கிருஷ்ணமூர்த்தி

திமுக

1991

கே.எஸ்.அழகிரி

இந்திய தேசியகாங்கிரஸ்

1996

கே.எஸ்.அழகிரி

தமிழ் மாநிலகாங்கிரஸ்

2001

துரை.கி.சரவணன்

திமுக

2006

அருள்மொழிதேவன்

அதிமுக

2011

பாலகிருஷ்ணன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அருண்மொழிதேவன்.A

அதிமுக

56327

2

பாலகிருஷ்ணன்.K

கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)

39517

3

ராஜமன்னன்.P

தேமுதிக

10303

4

ஸ்ரீனிவாசன்.A

பாஜக

1054

5

வேல்முருகன்.P

சுயேச்சை

954

6

வினோபா.C

சுயேச்சை

797

7

பாரதிதாசன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

453

8

சுந்தரவினயகம்.N

சுயேச்சை

326

9

பாலகிருஷ்ணன்.R

சுயேச்சை

275

10

ஜெய்ஷங்கர்.P

சுயேச்சை

207

11

பாலகிருஷ்ணன்.K

சுயேச்சை

147

12

வாசு.S

சமாஜ்வாதி கட்சி

126

13

பாலகிருஷ்ணன்.K

சுயேச்சை

115

14

பாரதிமோகன்.K

அனைத்திந்திய பார்வர்டு பிளாக்

114

15

ராமசந்திரன்.G

சுயேச்சை

107

16

அப்துல்அலி.A

சுயேச்சை

97

17

அர்ஜுனன்.T

சுயேச்சை

83

18

அப்துல்ஹலீம்.A

சுயேச்சை

64

111066

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பாலகிருஷ்ணன்.K

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி

72054

2

ஸ்ரீதர் வாண்டையார்

திமுக

69175

3

கண்ணன்.V

பாஜக

4034

4

பன்னீர்.R

லோக் ஜனசக்தி கட்சி

1010

5

வினோபா.C

சுயேச்சை

933

6

சங்கர்.S

சுயேச்சை

591

7

அருள்ப்ரகாசம்

சுயேச்சை

478

8

சத்யமூர்த்தி.K

சுயேச்சை

459

9

செல்லையா.K

பகுஜன் சமாஜ் கட்சி

432

149166

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x