Published : 10 Apr 2014 11:48 AM
Last Updated : 10 Apr 2014 11:48 AM
அதிமுகவினர் சொல்வதை எதையும் செய்யமாட்டார்கள். அதனால் தான் அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
புதுக்கோட்டை திலகர் திடலில் திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பிரச்சாரம் செய்த அவர் பேசியது:
புதுக்கோட்டையில் 132 ஆண்டு களைக் கடந்த ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு இதுவரை மகப் பேறு மருத்துவர் நியமிக்கப்பட வில்லை. அதேபோல, கறம்பக்குடி அரசு மருத்துவமனையிலும் மருத்து வர் இல்லை. மருத்துவக் கல்லூரி கொண்டுவருவதாக சொன்னார் கள். ஆனால், கொண்டுவரவில்லை. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் மாவட்டத்திலேயே சுகாதாரத்தில் இத்தகைய அவலநிலை உள்ளது.
கந்தர்வகோட்டைக்கு முந்திரி தொழிற்சாலை கொண்டு வருவதாக சொன்னார்கள். அங்கு அமைச்சர் சுப்பிரமணியன் இருந்தும் இது வரை எந்தத் தொழிற்சாலையும் வரவில்லை. புதுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் இடையே ரயில் பாதை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை. சொல்வதை செய்யாதது தான் அதிமுக அரசின் சாதனை.
அதிமுக ஆட்சியில் அறிவிப் பார்கள். ஆனால். எதையும் செய்ய மாட்டார்கள் என்பதால்தான் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உள்பட பல அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்.
இங்கு குடிக்கத் தண்ணீர் இல்லை, வேலை இல்லை, மின் சாரம் இல்லை. புதுக்கோட்டையில் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்ததே யாருக்காவது நிவாரணம் கொடுத்தார்களா? வறட்சி நிவா ரணம் கொடுத்தார்களா? புதுக் கோட்டை நகராட்சியை மேம்படுத்த ரூ. 50 கோடியை ஒதுக்கினார்களே என்னவாயிற்று?. புதிய பேருந்து நிலையம் கட்டப்படுமென அறி வித்தார்கள் இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.
மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT