Published : 16 Apr 2014 02:55 PM
Last Updated : 16 Apr 2014 02:55 PM

தடுப்புக் காவல் சட்டம் தேவையில்லை: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக உள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்கள் கண்மூடித்தனமாக பாய்ச்சப்படுவதை அடியோடு ஒழிப்போம்.

* வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள்னர். நிரபராதிகளை பாதுகாக்கும் நோக்கில், இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய சட்டதிருத்தம் செய்திடப் பாடுபடுவோம்.

* அனைத்து வளர்ந்த நாடுகள் போன்று, பள்ளிக்கல்வியானது முழுக்க முழுக்க அரசினால் நடத்தப்படும் நிலையை உருவாக்கிட முயற்சி மேற்கொள்ளப்படும்.

* காந்தி, பெரியார், காமராசர், நேரு போன்ற தலைவர்களின் உயிர்மூச்சுக் கொள்கையான மதுவிலக்கு செயல்படுத்தப்படும்.

* இந்திய புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். இந்தியாவை புகையில்லா நாடாக மாற்ற பாடுபடுவோம்.

* விவசாயத்தை அழிக்கும் மீத்தேன் எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும்.

* அணு உலை தேவையில்லை என்பதே பாமக நிலைப்பாடு. கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை முற்றிலுமாக மூடப்படும். புதிய அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும், தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் குரல் கொடுப்போம்.

*இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ்மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.

*சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஈழத்தமிழர்களிடம் விசாரணை நடத்த இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தும்.

*இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்.

உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x