Published : 12 Apr 2014 10:45 AM
Last Updated : 12 Apr 2014 10:45 AM
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியை ஆதரித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்கிறார்.
தண்டையார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் திடலில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் சிறப்புரை ஆற்றுகிறார். இத்தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT