Published : 25 Apr 2014 09:11 AM
Last Updated : 25 Apr 2014 09:11 AM
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்ததாக, தேர்தல் சிறப்பு டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதுதொடர்பாக காவல் துறை இயக்குநர் (தேர்தல்) அனூப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
தேர்தல் பணியை கவனிக் கும் பணி என்னிடம் ஒப்படைக் கப்பட்டது. அதன்படி தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க பல விதமான வியூகங்களை அமைத் தோம். தேர்தல் ஆணையத் துடன் இணைந்து சிறப்பாக தேர்தலை நடத்தி முடித்துள் ளோம்.
ஒரு சில இடங்களில் மட்டும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்ட தாகத் தகவல்கள் வெளியாகின. அந்த இடங்களுக்குப் பறக்கும் படையினர் சென்று உடனடியாக நிலைமையை சரிசெய்தனர்.
மற்றபடி பெரிய அளவில் எங்கும் வன்முறைகள் நடக்க வில்லை. தமிழகத்தில் மக்கள வைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு சிறப்பு டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT