Published : 11 Apr 2014 09:10 AM
Last Updated : 11 Apr 2014 09:10 AM

வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் 11,000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 11 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவதற்கு தமிழகத்தில் மிக அதிக அளவில் மனுத்தாக்கல் செய்துள்ள னர். அதனால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுவாக, 2006-க்கு முன், 2006-க்குப் பின் என இரு வகையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.

இதில் 2006-க்கு பிந்தைய மாடல் இயந்திரங்கள், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பயன் படுத்தப்படும். இந்த வகை இயந் திரங்கள் இப்போது 34,176 உள்ளது. 38,176 இயந்திரங்கள் தேவைப் படுகிறது. அதுபோல், 2006-க்கு முந்தைய 70,878 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஆனால், இப்போது 77,237 இயந்திரங்கள் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு மட்டும் கூடுதலாக, 11 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதைத் தரக் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

தேர்தலில் மது

பொதுமக்கள், மதுவை லஞ்ச மாக பெறக்கூடாது. அதுபோல், ஓட்டுப்போட்டால் சலுகை தருவ தாகச் சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதை சரியென் றும் சொல்லமாட்டேன். தவறு என் றும் சொல்லமாட்டேன். அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை ரூ.34.60 கோடி ரொக்கம் மற்றும் பொருட் கள் தேர்தல் சோதனையில் சிக்கியுள் ளன. இதில், சென்னையில் அதிகபட்சமாக, ரூ.10.76 கோடி சிக்கியுள்ளது. அதற்கு அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10.76 கோடி ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை ரூ.5.5 கோடியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x