Published : 11 Apr 2014 06:11 PM
Last Updated : 11 Apr 2014 06:11 PM

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீர்: காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தல்

'தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்' என்று மோடி திருமண விவகாரத்தில், காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தரப்பில் முதன்முதலாக பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மனைவியின் பெயரை மறைத்த மோடி, நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாவலராக எப்படி இருக்க முடியும? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், "நேரு குடும்பத்திலும் இந்திரா காந்தி குடும்பத்திலும் உள்ள விவகாரங்கள் குறித்து பாஜக நன்கு அறியும். எனினும், நாகரீகம் கருதி நாங்கள் அதை விமர்சனம் செய்வதில்லை" என்றார்.

பாஜகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "மோடியின் திருமண விவகாரம் தொடர்பாக ராகுல் விமர்சனம் மேற்கொள்ளும் முன் வேட்புமனு விவரங்களை நன்கு படித்திருக்க வேண்டும். மோடி உண்மையைதான் அதில் தெரிவித்துள்ளார். இதில் ஏதும் தவறில்லை. மேலும், இது குறித்த மோடியின் மனைவியே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பெண்கள் அமைப்புகள் சில மோடி குறித்து விமர்சனம் செய்கின்றனர். நான் அவர்களிடம் கேட்க நினைப்பது, அவர்கள் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கினறனாரா? என்று தான். மோடியின் திருமண விவகாரம் குறித்து அவரது சகோதரர் நேற்று எங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடிக்கு நடந்த திருமணம் குழந்தைப் பருவத்தில் நடந்தது என்று விளக்கியுள்ளார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x