Published : 20 Apr 2014 12:25 PM
Last Updated : 20 Apr 2014 12:25 PM

பிஹார் சட்டமன்ற இடைத்தேர்தல்: லாலு கூட்டணியில் குழப்பம்

பிஹார் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிஹாரில் மக்களவைத் தேர்தலோடு 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் கிஷண்கஞ்ச் மாவட்டம், கோச்சாதாமன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சாதிக் சம்தாணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பப்லு என்கிற இன்தகாப் ஆலம் மனு தாக்கல் செய்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தையில் கோச்சாதாமன் தொகுதி லாலு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறவில்லை. இந்நிலையில் வரும் 24-ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தக் குழப்பத்தால் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரான முஜாஹித் ஆலம் ஆதாயம் அடையக்கூடும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரேம்சந்திரா மிஸ்ரா கூறியதாவது: ‘காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நேரத்தில் வேட்புமனு வாபஸ் பெறும் தேதி முடிந்துவிட்டது. எனவே, லாலு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் படி சாதிக் சம்தாணிக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

இதன்படி தனது வாக்குகளை லாலு கட்சிக்கு அளிக்குமாறு சாதிக் பிரச்சாரம் செய்வார் என்று நம்புகிறோம். இதில் தவறு நடந்தால் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது தீவிர பிரச்சாரம் செய்துவரும் சாதிக், தனக்கு ஆதரவாகவே வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x