Published : 13 Nov 2022 07:51 AM
Last Updated : 13 Nov 2022 07:51 AM

இந்திய மருத்துவ ஆணைய நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றும் பிலிப்பைன்ஸ் கல்லூரிகள்: லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி தகவல்

சென்னை: இந்திய மருத்துவ ஆணைய நிபந்தனைகளை பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றுகின்றன. அங்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது என்று லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்புவோர் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 2021 நவம்பரில் ஓர் ஆணை வெளியிட்டது.

குறைந்தபட்சம் 54 மாதப் படிப்பு,19 பாடங்கள் கட்டாயம், ஆங்கிலவழிக் கல்வி, ஓராண்டு உள்ளுறை மருத்துவப் பயிற்சி, அந்நாட்டின் நிர்வாக அமைப்பிடம் இருந்து பெறப்படும் மருத்துவப் பயிற்சி அனுமதி என பல்வேறு வரையறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளன.

அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவக் கல்லூரிகள், அதிலும் குறிப்பாக, தவோ நகரில் உள்ள தவோ மருத்துவக் கல்லூரி, புரோக்கன்ஷயர் மருத்துவக் கல்லூரி ஆகியவை இந்திய மாணவர்கள் மருத்துவம் கற்க ஏற்றதாக உள்ளன. மருத்துவப் படிப்புக்கான கட்டணம் புரோக்கன்ஷயர் மருத்துவக் கல்லூரியில் ரூ.16.50 லட்சம், தவோ மருத்துவக் கல்லூரியில் ரூ.25 லட்சம் ஆகும்.

இங்கு படித்து முடிப்பவர்கள்தான், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்காக இந்தியாவில் நடத்தப்படும் எஃப்எம்ஜி தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.

இறுதியாக நடந்த எஃப்எம்ஜி தேர்வில் லிம்ரா நிறுவனத்தில் படித்தவர்களில் 87% தேர்ச்சி பெற்றனர். அவர்களில் இந்த 2 கல்லூரிகளில் படித்தவர்கள் தேசிய ரேங்க் பெற்றனர்.

இக்கல்லூரிகளில் 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. குறைந்தபட்சம் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண், நீட் தேர்வில் 93 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள லிம்ராஓவர்சீஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், சேர்க்கை பெற்றுத்தருவதோடு, விசா, விடுதி வசதி உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்து, படிப்புக் காலம் முழுவதும் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக செயல்படுகிறது.

இதுகுறித்து மேலும் தகவல் பெற லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9445783333 மற்றும் 9952922333 ஆகிய எண்களில் தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x