பல்லாவரம் | நீட் தேர்வு மதிப்பெண் குறைந்ததால் மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை

சாய் அபினோ

சாய் அபினோ

Updated on
1 min read

பல்லாவரம்: நீட் தேர்​வில் எதிர்​பார்த்த மதிப்​பெண் கிடைக்​காத​தால் மன அழுத்​தத்​தில் இருந்த இளைஞர் வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டார்.

பல்​லா​வரம் கரிபி தெரு​வைச் சேர்ந்த பிர​பாகரன் மகன் சாய் அபினோ (18). இவர் இந்த ஆண்டு நடை​பெற்ற நீட் தேர்வை இரு​முறை எழு​திய நிலை​யில், எதிர்​பார்த்த அளவுக்கு மதிப்​பெண் கிடைக்​காத​தால் மன அழுத்​தத்​தில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்து அண்ணா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்​தில் பயிற்சி பெற்று வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று வீட்​டில் உள்ள படுக்​கையறை​யில் சாய் அபினோ தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டார்.

தகவலறிந்த பல்​லா​வரம் போலீ​ஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்​புவதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டனர். இது தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தற்​கொலை தீர்​வல்ல

மன அழுத்​தம் அல்​லது தற்​கொலை எண்​ணம் ஏற்​பட்​டால் தனிமை​யில் இருக்​காமல் குடும்​பத்​தினர், நண்​பர்​கள் அல்​லது நம்​பிக்​கைக்​குரிய​வர்​களிடம் பேசுவது அவசி​யம்.

உடனடி உதவிக்கு மாநில தற்​கொலை தடுப்பு உதவி மையம் 104 என்ற 24 மணி நேர எண்​ணைத் தொடர்பு கொள்​ளலாம். மேலும் சினேகா தற்​கொலை தடுப்பு உதவி மையத்தை 044-2464 0050 என்ற எண்​ணிலும், help@snehaindia.org என்ற மின்​னஞ்​சல் முகவரி​யிலும் தொடர்பு கொள்ளலாம்.

<div class="paragraphs"><p>சாய் அபினோ</p></div>
காட்டாங்குளத்தூர் அருகே நள்ளிரவில் விபத்து: அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in