சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொலை - மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொலை - மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதிகாரி​யின் நேர்​முக உதவி​யாளர் சந்திரநாத் ராத்தை (42) மர்ம நபர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

மேற்​கு​வங்க தேர்​தலில் பாஜக 207 தொகு​தி​களில் வெற்றி பெற்று ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. பவானிபூர் தொகு​தி​யில் திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தாவை, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதி​காரி தோற்​கடித்தார். பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதி​காரி​யின் வெற்​றிக்​காக அவரது நேர்முக உதவி​யாளர் சந்​திர​நாத் ராத் அதிதீ​விர​மாக பாடு​பட்​டார். அப்​போது முதலே அவருக்கு கொலை மிரட்​டல்​கள் வந்​தன.

இந்த சூழலில் சந்​திர​நாத் ராத் நேற்று முன்​தினம் இரவு 9 மணிக்கு தலைநகர் கொல்​கத்​தா​வில் இருந்து தனது சொந்த ஊரான மத்தியம்​கி​ராம் நகருக்கு காரில் சென்று கொண்​டிருந்​தார். ஓட்டுநர் காரை ஓட்ட, முன் இருக்​கை​யில் சந்​திர​நாத் ராத் அமர்ந்திருந்​தார். இரவு 10.30 மணிக்கு மத்​தி​யம்​கி​ராம் நகரின் பிரதான சந்​திப்​பில் கார் சென்று கொண்​டிருந்​தது. அப்​போது ஒரு கார் திடீரென குறுக்​காக பாய்ந்து வழிமறித்​தது. அதே​நேரம் மோட்​டார் சைக்​கிள்​களில் வந்த மர்ம மபர்​கள் கைத்துப்பாக்கிகளால் 10 குண்​டு​களை சுட்​டனர். இதில் 4 குண்டுகள் சந்​திர​நாத் ராத்​தின் தலை, மார்பை துளைத்​தது.

கார் ஓட்​டுநர் புத்​ததேவ் பெரா மீதும் சில குண்​டு​கள் பாய்ந்​தன. இதன்​பிறகு மர்ம நபர்​கள் தப்​பிவிட்​டனர். போலீ​ஸார் விரைந்து வந்து சந்​திர​நாத் ராத், அவரது ஓட்​டுநர் புத்​ததேவ் பெராவை மீட்டு அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அப்​போது சந்​திர​நாத் ராத் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்துவர்​கள் தெரி​வித்​தனர். ஓட்​டுநர் புத்​ததேவ் பெரா​வின் உடலில் பாய்ந்த குண்​டு​கள் அறு​வைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்​டன. அவரது உடல்​நலம் தேறி வரு​கிறது.

மேற்​கு​வங்க போலீ​ஸார் கூறிய​தாவது: கொலைக்கு பயன்படுத்தப் பட்ட காரின் பதிவெண் போலி​யானது. மேலும் அவர்​கள், கிளாக் 47X ரக கைத்​ துப்​பாக்​கிகளைப் பயன்​படுத்தி உள்​ளனர். இந்த துப்​பாக்​கியை நன்கு பயிற்சி பெற்​றவர்​களால் மட்​டுமே கையாள முடி​யும். மிக அரு​கில் இருந்து சந்​திர​நாத் ராத்தை சுட்டுள்ளனர்.

கொலைக்கு பயன்​படுத்​தப்​பட்ட மோட்​டார் சைக்​கிளை பறி​முதல் செய்​திருக்​கிறோம். அதன் இன்​ஜின் எண், சேசிங் எண்கள் சேதப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. சந்​தேகத்​தின்​பேரில் 3 பேரை பிடித்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரிவித்தனர்.

சந்​திர​நாத் ராத் யார்?

சந்​திர​நாத் ராத் இந்​திய விமானப் படை​யில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தார். விருப்ப ஓய்வு பெற்ற அவர், சில ஆண்​டு​கள் கார்ப்​பரேட் நிறு​வனங்​களில் பணி​யாற்​றி​னார். பின்​னர் சுவேந்து அதி​காரி​யுடன் இணைந்​து பணியாற்றி வந்துள்ளார்.

மம்​தா தோற்றதால் கொலை: சுவேந்து குற்றச்சாட்டு

பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று சந்திரநாத் ராத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவை தோற்கடித்தேன். அதற்கு பழிவாங்கும் வகையில் எனது நேரடி

உதவியாளரை கொலை செய்துள்ளனர். இது திட்டமிட்ட கொலை ஆகும். கடந்த 3 நாட்களாக சந்திரநாத் ராத்தை வேவு பார்த்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் காட்டாட்சி நடைபெற்று வந்தது. திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு மக்களே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாஜக அரசு பதவியேற்ற பிறகு சமூகவிரோத கும்பல்கள் வேரோடு அழிக்கப்படும். இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொலை - மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?
​முதல்​வர் பதவியைக் குறிவைத்து இபிஎஸ் காய்நகர்த்தல்கள் - திமுக ஆதரவுடன் அரசியலில் திகில் ஆட்டம் ஆரம்​பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in