​முதல்​வர் பதவியைக் குறிவைத்து காய்நகர்த்தல்கள்: ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?

திமுக ஆதரவுடன் அரசி​யலில் திகில் ஆட்​டம் ஆரம்​பம்
அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி

Updated on
3 min read

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்​டிலில் அமர முடி​யாமல் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார் விஜய். எனினும் அறு​திப் பெரும்​பான்​மைக்கு மிக அரு​கில் நிற்​ப​தால் எப்​படி​யும் விஜய் தமிழக முதல்​வ​ரா​வார் என தவெக-​வினர் நம்​பு​கிறார்​கள். இதற்கு நடு​வே, அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்​வந்​திருப்​ப​தாக​வும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்று ஆளுநரை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்​றும் தகவல்​கள் தடதடக்​கின்​றன.

திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் அதி​முக. இந்த இரண்டு கட்​சிகளும் எதிரெ​திர் துரு​வங்​களாக நிற்​பது​தான் இரண்டு கட்​சிகளுக்​குமே நல்​லது. அப்​படி இருப்​ப​தால் மட்​டுமே கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த இரண்டு கட்​சிகள் மட்​டுமே மாறி மாறி ஆட்​சி​யைப் பிடித்து வரு​கின்​றன. இதனால் இவர்​களிடம் ஐம்​பது வருடங்​களுக்கு முன்பு ஆட்​சியை பறி​கொடுத்த காங்​கிரஸால் அதற்​குப் பிறகு எழவே முடிய​வில்​லை.

இந்த நிலை​யில்​தான், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக பாஜக தமிழகத்​தில் தலை​தூக்​கியது. ஆனால், அந்​தக் கட்​சி​யாலும் இப்​போது வரைக்​கும் திரா​விடக் கட்​சிகள் தயவில்​லாமல் முன்​னுக்கு வரமுடிய​வில்​லை. என்​ற​போதும், விஜய்​யின் வரவால் இம்​முறை திரா​விடக் கட்​சிகளின் தலைமை இல்​லாத ஓர் அரசாங்​கம் தமிழகத்​தில் அமை​யும் சூழல் உரு​வாகி இருக்​கிறது. காங்​கிரஸ், பாஜ கட்​சிகளால் சாதிக்க முடி​யாத இந்த அதிச​யத்தை சாதித்​துக் காட்டி இருக்​கிறார் விஜய்.

இருந்த போதும் அறு​திப் பெரும்​பான்​மைக்​காக, இப்​போது திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற கட்​சிகளின் தயவை நாடி நிற்​கிறார் விஜய். இது தொடர்​பாக தவெக தரப்​பில் இருந்து கம்​யூனிஸ்ட் தலை​வர்​களிடம் பேசி வரு​கிறார்​கள். அதேபோல் பழைய பாசத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவனிடம் நேற்று முன்​தினம் மாலை ஆதவ் அர்​ஜுனா நேரடி​யாகவே பேசி இருக்​கிறார். முதலில் ஆலோ​சித்து முடிவை தெரி​விப்​ப​தாக சொன்ன திரு​மாவளவன், இரவு 8 மணிக்​குமேல் ஆதவ் தரப்​பில் இருந்து தொடர்பு கொண்​ட​போது வேறு​வித​மாக பதில் சொல்லி இருக்​கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்​புக்கு பிடி​கொடுக்​க​வில்​லை. என்றாலும் விஜய்யை ஆட்​சி​யமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்​சிகளுமே வலி​யுறுத்தி வரு​கின்​றன. அதே​நேரத்​தில், இந்​தக் கட்​சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்​டும் என ஸ்டா​லின் வேண்டுகோள் விடுத்​திருக்​கிறார்.

விசிக, கம்​யூனிஸ்ட்​களின் ஆதர​வுக்கு பங்​கம் வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே பாமக தரப்​புடன் அதி​காரப்பூர்வ பேச்சுவார்த்தை எது​வும் நடத்​த​வில்லை தவெக. இருப்​பினும் இரண்டு தரப்​பிலும் சிலர் நட்பு ரீதி​யில் பேசி​ய​போது, தங்​களுக்கு துணை முதல்​வர் பதவியை தரு​வதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்​டும் என்​றும் பாமக தரப்​பில் கோரிக்கை வைத்​த​தாகச் சொல்​கிறார்​கள். இதற்கு சாத்​தி​யமில்லை என்​ப​தால் மேற்​கொண்டு இதுபற்றி தவெக தரப்​பில் பேச்​சு​வார்த்​தையை தொடர​வில்லை என்​கிறார்​கள்.

இப்​படி​யான சூழலில்​தான், திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்​சி​யமைக்க ஆலோ​சனை நடப்​ப​தாக நேற்று முன்​தினம் ஒரு செய்தி காட்​டுத் தீயாய் கசிந்​தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்​கப்​பட்​டிருந்த போலீஸ் கான்​வாய் விலக்​கப்​பட்​டதும் பல்​வேறு ஊகங்​களுக்கு வழி​வகுத்​தது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர், “இந்​தத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோற்​றதை​விட தனது தந்தை ஸ்டா​லின் தோற்​றதை உதயநிதி ஸ்டா​லி​னால் ஜீரணித்​துக் கொள்ள முடிய​வில்​லை. என்ன விலை கொடுத்​தாவது இதை சரிசெய்ய வேண்​டும் என்​

ப​தில் தீவிர​மாய் இருக்​கிறார் உதயநி​தி. அதி​முக உடன் திமுக கைகோர்க்​கிறது என்ற செய்​தி​யும் உதயநிதி தரப்​பில் இருந்தே கசிந்​திருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுனுடன் நேற்று முன்​தினம் உதயநிதி பேசி​ய​தாக​வும் சொல்கிறார்​கள்.

திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக காலூன்றி இருக்​கும் விஜய், ஆட்​சி​யில் அமர்ந்​தால் திரா​விடக் கட்​சிகளில் ஒன்று நிச்​ச​யம் காணா​மல் போய்​விடும். ஏற்​கெனவே கரைந்து கொண்​டிருக்​கும் அதி​முக அந்த இடத்​துக்கு தள்​ளப்பட நிறையவே வாய்ப்​பிருக்​கிறது. இதையெல்​லாம் உணர்ந்​தே, அதி​முக தரப்​பிலும் ‘தி​முக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி’ என்ற செய்​தி​களை யாரும் மறுக்​க​வில்​லை. மாறாக, “118 எம்​எல்​ஏ-க்​கள் ஆதர​வுடன் ஆளுநரை சந்​திப்​பார் பழனி​சாமி” என திட​மாகச் சொல்லி இருக்​கிறார் புதுச்​சேரி மாநில அதி​முக அமைப்​பாளர் அன்​பழகன்.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு பதில் சொன்ன அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் செம்​மலைகூட, “தி​முக ஆதரவு குறித்து பொதுச் செய​லா​ளர் முடி​வெடுப்​பார்” என்​று​தான் சொல்லி இருக்​கிறார்.

திமுக - அதி​முக ஆட்சி குறித்த செய்​தி​களை டெல்லி பாஜக தலை​மை​யும் ரசிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. அதற்​குக் காரணம், விஜய்க்கு காங்​கிரஸ் ஆதர​வுக் ‘கரம்’ நீட்டி இருப்​பது. விஜய் செல்​வாக்​கில் தமிழகத்​தில் மீண்​டும் காங்​கிரஸ் தலை​தூக்கி விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறது பாஜக. அதன் காரண​மாகவே, அறு​திப் பெரும்​பான்மை எம்​எல்​ஏ-க்​களின் பட்​டியலைக் கேட்டு விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இழுத்​திருக்​கிறார் ஆளுநர்.

விஜய் ஆட்​சிக்கு வராமல் தடுப்​ப​தற்​காக பழனி​சாமியை வெளி​யில் இருந்து ஆதரிக்​கும் முடிவுக்கு திமுக வந்​திருப்​ப​தாக சொல்​பவர்​கள், “இது தொடர்​பாக டெல்​லி​யின் அனு​ம​தி​யோடு அதி​முக சில மூவ்​களை எடுத்து வரு​கிறது. அதன்​படி நேற்றே பழனி​சாமி ஆளுநரை சந்​திப்​ப​தாக இருந்​தது. ஆனால், விஜய்க்கு சாக்​குப் போக்கு சொல்​லிக் கொண்​டிருந்​த​தால் நேற்று ஆளுநர் - பழனி​சாமி சந்​திப்பு நடக்​க​வில்​லை. புதுச்​சேரி சென்ற பழனி​சாமி அங்கு தங்​கவைக்​கப்​பட்​டுள்ள அதி​முக எம்​எல்​ஏ-க்​களிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். திமுக ஆதரவு குறித்து அப்​போது பேசப்​பட்​ட​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்​து, இன்று திமுக ஆதரவு கடிதத்​துடன் ஆளுநரை பழனி​சாமி சந்​திக்​கக் கூடும் என தெரி​கிறது.

விஜய்க்கு ஆட்​சி​யமைக்க வாய்ப்பு அமை​யாத காரணத்​தால் நாங்கள் பழனி​சாமிக்கு நிபந்​தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்​பில் விளக்​கம் கொடுக்​கப்​படலாம். தங்​களின் இந்த முடி​வால் விஜய்யை ஆட்​சி​யமைக்க முடி​யாமல் தடுத்​து​விட முடி​யும் என நம்​பு​கிறார் உதயநி​தி. அதே​போல், பழனிசாமி​யும் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​று​வ​தால் அதி​முக-வை பிள​வில் இருந்து காப்​பாற்ற முடி​யும் என நினைக்​கிறார்” என்கிறார்​கள்.

யாருமே நினைத்​துக்​கூட பார்க்க முடி​யாத அதி​முக ஆட்சி திமுக ஆதர​வில் அமை​யு​மா... திமுக எதிர்ப்​பிலேயே வளர்ந்த அதி​முக-​வின் எம்​எல்​ஏ-க்​கள் அத்​தனை பேரும் ஒரே​முக​மாய் இதை ஏற்​பார்​களா... அல்​லது திமுக உறவை காரணம் காட்டி அதி​முக-​வில் பிளவு ஏற்​படுமா என்ற கேள்வி​களுக்கு எல்​லாம் விடை தெரி​யும் நாள் வெகுதூரத்​தில் இல்​லை.

<div class="paragraphs"><p>அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி</p></div>
118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி: விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in