செங்குன்றம் | தாயம் விளையாட்டு தகராறில் ஒருவர் கொலை; 2 பேர் கைது

செங்குன்றம் | தாயம் விளையாட்டு தகராறில் ஒருவர் கொலை; 2 பேர் கைது
Updated on
1 min read

செங்​குன்​றம்: தாயம் விளை​யாட்டு தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்​யப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக 2 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சென்​னை, மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள சின்​ன​மாத்​தூரை சேர்ந்த ராம​ராஜ் (35 ), ராஜா (52), பெரு​மாள் (43), ஞானம், மணலியை சேர்ந்த முரளிதரன்​(35), லோக​நாதன் என்​கிற பட்டு (32) ஆகியோர் நேற்று முன்​தினம் தாயம் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, அது கைகலப்​பாக மாறியது. பின்​னர் 6 பேரும் அங்​கிருந்து கலைந்து சென்​றனர். பின்​னர் இரவு சின்​ன​மாத்​தூர் பகு​தி​யில் உள்ள மதுக்​கடைக்கு எதிரே ராம​ராஜ், ராஜா, பெரு​மாள் ஆகியோர் மது அருந்​திக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது அங்கு மது​போதை​யில் வந்த முரளிதரன், லோக​நாதன் ஆகியோர், ராம​ராஜ் உள்​ளிட்ட 3 பேரிடம் மீண்​டும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது முரளிதரனும், லோக​நாதனும் தாங்​கள் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் ராம​ராஜ், ராஜா, பெரு​மாள் ஆகியோரை வெட்​டினர்.

இதில் பலத்த காயமடைந்த ராம​ராஜ் சம்பவ இடத்​திலே உயி​ரிழந்​தார்; பெரு​மாள், ராஜா ஆகியோர் காயமடைந்​தனர். காயமடைந்த இரு​வரும் சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

அங்கு அவர்​கள் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை போலீ​ஸார், ராம​ராஜின் உடலைக் கைப்​பற்றி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து வழக்​குப் பதிவு செய்து முரளிதரன், லோகநாதன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

செங்குன்றம் | தாயம் விளையாட்டு தகராறில் ஒருவர் கொலை; 2 பேர் கைது
காட்டாங்குளத்தூர் அருகே நள்ளிரவில் விபத்து: அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in