Published : 10 May 2023 07:12 AM
Last Updated : 10 May 2023 07:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதியில் பழமையான காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. ரூ. 12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரமாகும். இதனிடையே இந்த நிலத்தை கோயில் அறங்காவல் குழுவினர் கடந்தாண்டு பார்வையிட்டனர்.
அப்போது அந்த நிலத்தை மர்ம நபர்கள் சிலர் போலியாக பத்திரம் தயாரித்து அதனை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. இது குறித்து கோயில் அறங்காவல் குழு நிர்வாகி சுப்ரமணியன் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் எஸ்பி மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக் கப்பட்டது. அக்குழுவினர் நடத்திய விசாரணையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை 31, 204 சதுர அடி நிலத்தை சென்னை ரத்தின வேல் (54), அவரது மனைவி மோகன சுந்தரி, மனோகரன்(54), கலிதீர்த்தாள்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னராசு (எ) பழனி(74) மற்றும் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து மனைகளாக பிரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் ஏற்கெனவே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸார் தொடர்ந்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் மற்றொரு பகுதியான 32,831 சதுர அடி நிலத்தை முத்தியால்பேட்டையை சேர்ந்த தச்சு தொழிலாளி பெரிய நாயகி சாமி (எ)அருள்ராஜ் (71), அவரது மகன் ஆரோக்கிய தாஸ் (எ)அன்பு (49), தனியார் துணிக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி ஆரோக்கிய ராஜ் பிரான்சுவா (37), முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன்(43) ஆகிய 4 பேர் போலியாக உயில் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT