Published : 11 Apr 2023 06:24 AM
Last Updated : 11 Apr 2023 06:24 AM
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், காப்பீடு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய நபரிடம் இணையம் வழியாக ரூ.80 ஆயிரத்தை இழந்த சிக்கலைச் சேர்ந்த திவ்யா, வாட்ஸ் அப் வழியாக தொடர்புகொண்டு சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம் ரூ.1.50 லட்சத்தை இழந்த தலைஞாயிறு வீ.உதயகுமார், தொலைபேசியில் தொடர்புகொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம் ரூ.4.98 லட்சத்தை இழந்த நாகை தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த ந.பாலச்சந்திரன், ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி செல்போனுக்கு லிங்க் அனுப்பிய நபரிடம் ரூ.2.44 லட்சத்தை இழந்த நாகை கீச்சாம்குப்பத்தைச் சேர்ந்த கலைவாணன் ஆகியோருக்கு ரூ.9.73 லட்சத்துக்கான காசோலையை எஸ்.பி கு.ஜவஹர் வழங்கினார்.
இந்த குற்றச் சம்பவங்களில் துரிதமாக நடவடிக்கை எடுத்து, குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு, அவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரை எஸ்.பி ஜவஹர் வரவழைத்து, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நிகழ்ந்தால் பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT