Published : 13 Mar 2023 06:06 AM
Last Updated : 13 Mar 2023 06:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி மூலக்குளத்தில் கண வரை கொன்ற மனைவியையும், அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (28). சுமைதூக்கும் தொழிலாளி.
இவரது மனைவி ஜனோவாமேரி (26). இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5-ம் தேதி அதிகாலை வீட்டில் பிரான்சிஸ் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், கண்விழித்த பிரான்சிஸ் வலிதாங்க முடியாமல் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு கண் விழித்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பிரான்சிஸ் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த் தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரான்சிஸ் அன்று இரவு (மார்ச் 5)உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பிரான்சிஸ் மனைவியின் நடவடிக்கை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரான்சிஸ் மனைவி ஜனோவா மேரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிளம்பர் வேலை செய்து வரும் கணேசன்(26) என்பவருக்கும் நட்பு இருந்துள்ளது.
இதுதொடர்பாக மனைவியை பிரான்சிஸ் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து பிரான்சிஸ் கண்டிக்கவே, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 5-ம் தேதி பிரான்சிஸ் தூங்கிக்கொண்டிருந்த போது அவர் மீதும், அவர் படுத்திருந்த இடத்தை சுற்றியும் ஜனோவாமேரி, கணேசன் இருவரும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். உடலில் தீக்காயங்களுடன் பிரான்சிஸ் அலறியதும், கணே சனை அங்கிருந்து ஜனோவா மேரி செல்லும்படி கூறியுள்ளார்.
அங்கு வந்த அக்கம்பக் கத்தினரிடம், பிரான்சிஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக ஜனோவா மேரி நாடகமாடியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜனோவா மேரி மற்றும் அவரது ஆண் நண்பர் கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவர் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக அவரது மனைவி நாடகமாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT