Published : 06 Mar 2023 06:40 AM
Last Updated : 06 Mar 2023 06:40 AM
அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீஸார் தீவிர மதுவிலக்கு ஆய்வில் ஈடுபட்டனர். அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர்கள், சாராயம் காய்ச்சியவர்கள், கஞ்சா விற்றவர்கள், சந்து கடைகளில் மதுபானம் விற்றவர்கள் என 52 பெண்கள் உட்பட93 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து1,966 மது பாட்டில்களும், 40 லிட்டர் சாராயம், 80 லிட்டர் சாராய ஊறல்கள், 40 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 200 கிராம் கஞ்சா, மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT