Published : 18 Feb 2023 07:47 AM
Last Updated : 18 Feb 2023 07:47 AM
சென்னை: வேளச்சேரியில் பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, வேளச்சேரி, பெல் சக்தி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 19-ம் தேதி இரவு வீட்டு ஜன்னலைத் திறந்து வைத்துத் தூங்கினார். மறுநாள் காலை பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் அருகே இருந்த பீரோவில் வைத்திருந்த 8.5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் சீதா, சிவகுமார் ஆகியோரது வீடுகளிலும் அடுத்தடுத்து இதே பாணியில் நகை, பணம் திருடப்பட்டது.
இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாகச் சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில், வேளச்சேரியில் நடைபெற்ற 3 திருட்டு வழக்குகளிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இந்த திருட்டுகளில் ஈடுபட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விசாரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (38) என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT