Published : 23 Jan 2023 04:35 AM
Last Updated : 23 Jan 2023 04:35 AM
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மீன்களை மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையிலான அதிகாரிகள் ரோந்து சென்றனர்.
அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த விசைப்படகுகளை நிறுத்தி சோதனை செய்ததில் 48 விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதும், 49 விசைப் படகுகள் அனுமதி டோக்கன் பெறாமல் கடலுக்குச் சென்றதும் தெரியவந்தது.
இந்த 97 படகுகளுக்கான மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசல் விநியோகத்தை ரத்து செய்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT