Published : 30 Dec 2022 04:40 AM
Last Updated : 30 Dec 2022 04:40 AM

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 2022-ல் குற்ற வழக்குகள் 32 சதவீதம் குறைவு

திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் சரவணன் | கோப்புப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டைவிட நடப்பு 2022-ம் ஆண்டு கொலை மற்றும் காய வழக்குகள் 32 சதவீதம் குறைந்துள்ளது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றங்கள் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1,016 கொலை, காய வழக்குகள் பதிவாகி யிருந்தன. இவ்வாண்டு 685 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 32 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு 52 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.

இவ்வாண்டு 43 வழக்குகள் பதிவாகின. மாவட்ட காவல்துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களால் 16 கொலை சம்பவங்கள் தடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 354 வழக்குகள் இவ்வாண்டு பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு 599 வழக்குகள் பதிவாகியிருந்தன. அதாவது 41 சதவீதம் வழக்குகள் தற்போது குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 88 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வாண்டு 97 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டு பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நகை, ரொக்கப்பணம் மற்றும் பொருட்களில் 70 சதவீதம் மீட்கப்பட்டு, 254 பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு களில் இதுவே அதிகமாகும். தென்மாவட்டங்களிலேயே திருநெல்வேலி மாவட்டத்தில்தான் இவ்வாண்டு சாலை விபத்துகள் குறைவாக நடைபெற்றுள்ளன. எனினும், கடந்தாண்டுடன் ஒப்பிடு கையில் விபத்துகள் எண்ணிக்கை 1.73 சதவீதம் அதிகரித்துள்ளது.

குண்டர் சட்டத்தின்கீழ் இவ்வாண்டு 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறிய 48 பேர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களில் 2,703 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பணமோசடி வழக்குகளில் கைதான சைபர் கிரைம் குற்றவாளிகளின் 122 வங்கி கணக்குகளில் ரூ.1.75 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.13.50 லட்சம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட 23 பேரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, அதற்கான ஆவணங் கள் 49 பேருக்கு வழங்கப் பட்டது. கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 பேருக்கு நிவாரண தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு 182 கிலோ கஞ்சாவும், 30 ஆயிரம் கிலோ தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x