Published : 08 Dec 2022 06:14 AM
Last Updated : 08 Dec 2022 06:14 AM
கமுதி: கமுதியை அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்திர பாண்டியன் மகன் பாலகுமார் (26). இவர் மீது கொலை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ளன.
வழிப்பறி வழக்கில் கமுதி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாலகுமாரை கொலை செய்ய ஒரு கும்பல் ஆயுதங்களுடன் திரிவதாக கமுதி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரை கண்டதும் தப்ப முயன்ற 7 பேரை பிடித்தனர். விசாரணையில் முன்பகையால் பாலகுமாரை கொலை செய்ய காத்திருந்ததாக ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாண்டியராஜன் (35), சிவசங்கர்(23), சரவணன்(24), விக்னேஸ்வரன் (22), அவனியா புரம் காளீஸ்வரன்(33), சிலை மான் உசேன்(24), மண்டல மாணிக்கம் வல்லரசு (22) ஆகிய 7 பேரை கைது செய்த னர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே தன்னை கொலை செய்ய ரவுடி கும்பல் வந்துள்ளதை அறிந்த பாலகுமார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT