Published : 22 Jun 2022 08:23 AM
Last Updated : 22 Jun 2022 08:23 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (19). இவரது உறவுக்கார பெண் ஒருவரை அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(34) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனால் கோபிக்கும் லட்சுமணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
2014-ல் லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்களான நாகராஜ்(35), தீனா(எ) வெங்கடேஷ்(35), மணி(34), சரண்(34), பாபு(34), ஐயப்பன்(38) ஆகியோர் கோபியை தாக்கினர். இதில் காயமடைந்த கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் மேற்கூறிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ் வழக்கில், நீதிபதி (பொ) வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார். 7 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT