Published : 16 Jun 2022 06:14 AM
Last Updated : 16 Jun 2022 06:14 AM
விழுப்புரம்: விழுப்புரம் சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்த ஜோகப் மெல்கி சதேக்(26). இவர் விழுப்புரத்தில் உள்ள வெல்டிங் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2017 ம் ஆண்டு ஒரு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த 16 வயது மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தனர்.
ஜோகப்மெல்கிசதேக்கை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி நேற்று ஜோகப் மெல்கிசதேக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT