Published : 11 Jun 2022 07:17 AM
Last Updated : 11 Jun 2022 07:17 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர்கள் 2 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தரூபன் மகன் கமரன்(22), சின்னராஜா மகன் மன்மதராஜா(22). கூலித் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோர் அண்மையில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, இளைஞர்கள் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT