Published : 05 Jun 2022 07:25 AM
Last Updated : 05 Jun 2022 07:25 AM
திருப்பூர்: கரூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1.21 கோடி மதிப்பிலான நூலை பெற்று மோசடி செய்ததாக பல்லடம் நகர அதிமுக செயலாளர் ராமமூர்த்தியை, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையைச் சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடன், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியாக பல்லடத்தை சேர்ந்த ராமமூர்த்தி தொடர்பில் இருந்து வந்தார். அசோக் ராம்குமார் நூலை அனுப்பினால், அதனை துணியாக மாற்றி அனுப்பும் நிட்டிங் நிறுவனத்தை ராமமூர்த்தி நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு ராமமூர்த்திக்கு அனுப்பிய ஒரு லட்சம் கிலோ நூலை துணியாக மாற்றி அனுப்பாமல், தன்னை மோசடி செய்துவிட்டதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அசோக்குமார் புகார் அளித்தார். அதில், நூலின் மதிப்பு ரூ.1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம். இதுதொடர்பாக கேட்டால் என்னை மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது நூலை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரின்பேரில் ராமூர்த்தி மீதும், அவரது நிறுவன கணக்காளர் சங்கர் கணேஷ் (41) மீதும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 30-ம் தேதி வழக்கு பதிந்தனர். இதைத் தொடர்ந்து பல்லடம் நகர அதிமுக செயலாளரான ராமமூர்த்தியை, குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT