Published : 10 Apr 2022 04:15 AM
Last Updated : 10 Apr 2022 04:15 AM
திருச்சி: திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆதிலட்சுமி(56). சப் இன்ஸ்பெக்டரான இவர், நவல்பட்டில் உள்ள காவலர் நிரந்தர பயிற்சிப் பள்ளியில் பெண்கள் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
அதற்கு வசதியாக தனது குடும்பத்தையும் இக்பால் காலனியிலிருந்து நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர்கள் குடியிருப்புக்கு மாற்றினார். இந்நிலையில் ஆதிலட்சுமி நேற்று காலை தனது வீட்டில் சேலையில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் அங்குசென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT