Published : 26 May 2024 06:01 AM
Last Updated : 26 May 2024 06:01 AM
மதுரை: மதுரை மேலூர் அருகே கத்தப்பட்டியில் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளி உள்ளது. இங்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் தங்கிப் பயில்கின்றனர்.
இங்குள்ள மாணவர்களில் பிஹாரைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 13 வயது சிறுவன் சமையலுக்குப் பயன் படுத்தும் கத்தியை எடுத்து, 10 வயது சிறுவனை குத்திக் கொலை செய்துவிட்டு, சடலத்தை கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு, வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.
நேற்று முன்தினம் முதல் விடுதிக்கு வராத 10 வயது சிறுவனைக் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், தனது தாயை தவறாகப் பேசியதால் கத்தியால் குத்தி கொலை செய்ததாக, 13 வயது சிறுவன் ஒப்புக்கொண்டான்.
பின்னர், 10 வயது சிறுவனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், கொலை செய்த13 வயது சிறுவனை கைது செய்து, சிறுவர்கள் கூர்நோக்கு மையத்துக்கு அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT