Published : 12 Mar 2020 04:21 PM
Last Updated : 12 Mar 2020 04:21 PM

மெல்போர்னில் மகளிர் டி20 உ.கோப்பை இறுதிப்போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று

கடந்த ஞாயிறன்று ஐசிசி மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டி இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் நேரில் காண வந்த ரசிகர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் போட்டியை நாதர்ன் ஸ்டேண்டிலிருந்து பார்த்திருக்கிறார்.

இது தொடர்பாக மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி:

“மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர் ஒருவருக்கு கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று நார்தர்ன் ஸ்டேண்டில் என்-42-ல் அமர்ந்து பார்த்த மற்ற ரசிகர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம் ஆனால் எந்த ஒரு நோய் அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியை சுமார் 86,174 ரசிகர்கள் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.

சாலைப்பாதுகாப்பு லெஜண்ட்ஸ் அணியின் உலக டி20 போட்டிகளும் மும்பையில் பார்வையாளர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2020 போட்டிகளும் பார்வையாளர்கள் இன்றி வெற்று மைதானங்களில் நடைபெறலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x