கிராமத்​துப் பின்​னணி​யில் ‘பேர் சொல்​லும் பிள்ளை’

கிராமத்​துப் பின்​னணி​யில் ‘பேர் சொல்​லும் பிள்ளை’
Updated on
1 min read

கதை​யின் நாயக​னாக கவின் நடிக்​கும் படத்​துக்​கு, ‘பேர் சொல்லும் பிள்​ளை’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். பசுப​தி நடித்த ‘தண்​டட்​டி’ படம் மூலம் கவனம் ஈர்த்த ராம் சங்​கையா இப்படத்தை இயக்​கு​கிறார்.

இதில் கவின் ஜோடி​யாக சஞ்​சனா கிருஷ்ண ​மூர்த்தி நடிக்​கிறார். ஆர்​.வேல்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​யும் இந்​தப்​ படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசையமைக்​கிறார். கிராமத்​துப் பின்​னணி​யில் பொழுது​ போக்கு அம்​சங்​களு​டன் உரு​வாகும் இப்​படத்தை பிரின்ஸ் பிக்​சர்ஸ் சார்​பில் எஸ்​.லக் ஷ்மன் குமார் தயாரிக்​கிறார்.

ஏ.வெங்​கடேஷ் இணை தயாரிப்பு செய்​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ்​.​தாணு, இயக்​குநர்​கள் தமிழ், தியாக ​ராஜன் குமார​ராஜா, ஆண்ட்ரூ லூயிஸ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்​டனர்.

கிராமத்​துப் பின்​னணி​யில் ‘பேர் சொல்​லும் பிள்ளை’
Niharika - in the mist: இருளிச்சைகளின் சுடரி தீபா | திரை தேவதைகள் 24
கிராமத்​துப் பின்​னணி​யில் ‘பேர் சொல்​லும் பிள்ளை’
லிங்கம்: விறுவிறு க்ரைம் த்ரில்லர் தரும் அனுபவம் எப்படி? | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in