Last Updated : 29 Sep, 2017 03:30 PM

 

Published : 29 Sep 2017 03:30 PM
Last Updated : 29 Sep 2017 03:30 PM

’காஞ்சனா 3’ அப்டேட்: நாயகியாக ஓவியா ஒப்பந்தம்

லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காஞ்சனா 3' படத்தின் 3 நாயகிகளில் ஒருவராக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'முனி’, 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி எடுத்து பெயர் பெற்றவர்.

தற்போது 'காஞ்சனா 3'க்கு தயாராகிவிட்டார் லாரன்ஸ். இதிலும் தானே நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். 3 நாயகிகள் இதற்காக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்கள். இதில் முதன்மை நாயகியாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற 2 நாயகிகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x