Published : 07 Mar 2022 01:32 PM
Last Updated : 07 Mar 2022 01:32 PM
பூஜா ஹெக்டேவின் வருத்தம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், பாக்யஸ்ரீ நடித்துள்ள படம் ’ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படம் பற்றி பூஜா ஹெக்டே கூறும்போது, ‘‘இது 1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல்கதை. இதில் பிரபாஸுக்கும், எனக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்திருக்கிறது. சத்யராஜ் சாருடன் எனக்கு காட்சிகள் இல்லாததுதான் வருத்தமாக இருக்கிறது’’ என்றார்.
மீண்டும் ஜெனிலியா: கர்நாடக தொழிலதிபரும், அரசியல்வாதியுமான ஜனார்த்தன ரெட்டியின் மகன் கிருத்தி ரெட்டி, ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ராதாகிருஷ்ண ரெட்டி இயக்குகிறார். கன்னடம், தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஜெனிலியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தனுஷுக்கு வில்லன்
நடிகராகவும் களமிறங்கியுள்ள இயக்குநர் செல்வராகவன், தனுஷ் நடிப்பில், ’நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவரது பிறந்தநாளில் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தனுஷுக்கு வில்லனாக செல்வராகவன் நடிப்பதாக கூறப்படுகிறது.
உலகளாவியகாதல் கதை: ஒலிம்பியா மூவீஸ் அம்பேத்குமார் தயாரிக்கும் படத்தில்நாயகனாக கவின் நடிக்கிறார். அபர்ணா தாஸ் நாயகி. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கணேஷ் கே.பாபு.'முதல் நீ முடிவும் நீ' ஹரிஷ், புகழ், பிரதீப் ஆன்டனி நடிக்கின்றனர். எழில்அரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ‘‘நவீனகாதல் கதையாக இப்படம் இருக்கும். உலகளாவிய ரசிகர்களைகவரும்’’ என்று அம்பேத்குமார் கூறினார். இதன் படப்பிடிப்புசென்னையில் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT