Published : 04 Jan 2020 01:55 PM
Last Updated : 04 Jan 2020 01:55 PM

ஷங்கர் - விஜய் - அனிருத் கூட்டணி உருவாகிறதா? 

ஷங்கர் - விஜய் - அனிருத் கூட்டணி தொடர்பான வாட்ஸ்-அப் சேட், மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மாஸ்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 64-வது படமாகும்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது 65-வது படத்தை தயாரிக்கும் பொறுப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார் விஜய். இதன் இயக்குநர் யார் என்பதுதான் தற்போதைய விஜய் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

இதனிடையே, நேற்று (ஜனவரி 3) வாட்ஸ்-அப் சாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் விஜய்யிடம் பணிபுரியும் ஜெகதீஷிடம் 'தளபதி 65' இயக்குநர் குறித்த கேள்விக்கு "தளபதி + ஷங்கர் + அனிருத்" என்று பதில் அளித்துள்ளார் ஜெகதீஷ். இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஷங்கர் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது என்று பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்த வாட்ஸ்-அப் சாட் தொடர்பாக ஜெகதீஷ் கூறுகையில், "இந்தப் பதிவு என்னுடையது அல்ல. யாரோ வதந்தியை உருவாக்க வேண்டுமென்றே போட்டோ ஷாப் செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதன் மூலம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x