Published : 10 Dec 2019 04:21 PM
Last Updated : 10 Dec 2019 04:21 PM

'தலைவர் 168' அப்டேட்: மீனா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீனா மற்றும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

இதில் சூரி, கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். தற்போது மீனா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியுடன் 'முத்து', 'எஜமான்', 'வீரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் மீனா. திருமணத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் படமாக 'தலைவர் 168' அமைந்துள்ளது.

ரஜினியுடன் மீண்டும் நடிக்கவுள்ளது குறித்து மீனா, "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரஜினி சாரோடு நீண்ட வருடங்கள் கழித்து நடிக்கவுள்ளேன். அதனால் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். நல்ல கதை, நல்ல கேரக்டர். எனது காட்சிகள் எல்லாம் ரொம்பவே கலகலப்பாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், ரஜினி நடித்த 'படையப்பா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். அதற்குப் பிறகு இப்போது தான் ரஜினி பத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x