Last Updated : 26 Aug, 2017 05:38 PM

 

Published : 26 Aug 2017 05:38 PM
Last Updated : 26 Aug 2017 05:38 PM

அஜித்தைப் பார்த்து எப்படி ஒருவர் அவதூறாக பேசலாம்? - நடிகர் நட்ராஜ் காட்டம்

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விவேகம்' விமர்சன சர்ச்சை தொடர்பாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் காட்டமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

இச்சர்ச்சை குறித்து ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அஜித் சாரை பார்த்து எப்படி ஒருவர் அவதூறாக பேசலாம்? இதை நாங்கள் கண்டிக்கின்றோம். படத்தை விமர்சியுங்கள் ஆனால் ஒரு நல்ல மனிதர் மற்றும் நடிகரைப் பற்றி அவதூறான வார்த்தைகளை பேசக் கூடாது

இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x