Last Updated : 03 Aug, 2017 07:59 PM

 

Published : 03 Aug 2017 07:59 PM
Last Updated : 03 Aug 2017 07:59 PM

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருட்டுப்பயலே - 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் 'திருட்டுப்பயலே - 2'. சுசி கணேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலே முடித்துவிட்டு, இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்கள். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

'திருட்டுப்பயலே-2' குறித்து சுசிகணேசன், "சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x