Published : 16 Aug 2016 02:49 PM
Last Updated : 16 Aug 2016 02:49 PM
ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞராக நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
'கடவுள் இருக்கான் குமாரு' மற்றும் 'ப்ரூஸ்லீ' ஆகிய படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் முடியும் தருவாயில் இருக்கிறது.
இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
முழுக்க இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருக்கின்றன. இதில் 4 பாடல்கள் முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். மற்ற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT